Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புதிய ரேஷன் அட்டைகோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை - கிடைக்குமா? கிடைக்காதா?- முழு விவரங்கள்

புதிய Ration Card வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உடனடியாகக் கிடைக்காது என உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
Tamilnadu முழுவதும் New Ration Card வேண்டி தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் website வழியாக பதிவாகி வருவதாகவும் இதுவரை குடும்ப அட்டை பெற விரும்பாதவர் களும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர்களும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனைப் பெற தனியாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்க தொடங்கியுதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் புதிதாக குடும்ப அட்டை வேண்டி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்றும் ஆனால் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் எனவும் இதற்கான பணியை நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரை குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைக்கும் எனவும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக அந்தத் தொகை கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments