அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கி வருகிறது.
தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் நகரத்தால் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் ஐந்து ஆசிரியர்கள் தமிழ்வழிப் பள்ளிகளில் இருந்தும் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் திறந்தநிலைப் பிரிவிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்படுவர்.
2022 2023 ஆம் ஆண்டிற்கான பின்வரும் ஐந்து துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கணிதம்
இயற்பியல்
வேதியல்
உயிரியல்
புவியியல்/ கணினி அறிவியல்/ வேளாண்நடைமுறைகள்.
விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை www.sciencecitychennai.in என்றஅறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் முறையான வழியாக அனுப்பப்பட வேண்டும். அதாவது சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு அறிவியல் நகர அலுவலகத்திற்கு 14.07.2023 அல்லது அதற்கு முன் மாலை ஐந்து முப்பது மணிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்