Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு - 50,000 ரூபாய் சம்பளம் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

நீலகிரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து அரசு வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் 17.07.2023 அன்று முதல் 27.07.2023 அன்று பிற்பகல் 05.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.



Jobs Details:

அலுவலக உதவியாளர்

ரூ.15700 50000 (நிலை 1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் இதரபடிகளுடன். 

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினைhttps://nilgiris.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
27.07.2023 பிற்பகல் 05:45 மணி வரை.

நிபந்தனைகள்

1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://nilgiris.nic.in
இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.


2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் 17.07.2023 அன்று முதல் 27.07.2023 அன்று பிற்பகல் 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளர்ச்சி பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள்முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

4. அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

5. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. 

7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

Post a Comment

0 Comments