Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET TODAY LATEST NEWS: நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் அமர்த்தல் கூடாது என்றும் நிலையான ஆசிரியர்களை உடனடியாக அமர்த்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


தமிழகத்தில் கடந்த 10- ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 


மேலும் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 80 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளனர். அவர்களுக்கு போட்டித்தேர்வு தேவையில்லை என்பது தான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடும் ஆகும்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு 15 நாட்கள் போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில்( Teacher eligibility test) வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments