Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

G.O : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அங்கன்வாடிப் பணிகள் - கோடை விடுமுறை அரசானை வெளியீடு!




முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாவது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாம் வாரமும், குறு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழங்கியும், அவ்வாறு அங்கன்வாடி மையங்களில், கோடை விடுமுறை வழங்கப்படும் மே மாதத்தின் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும் மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் நான்காவது வாரம் அருகிலுள்ள குறு அங்கன்வாடி மையங்களில் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர். 


குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும் போது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும்போது அங்கன்வாடி மையங்கள். அரசின் கொள்கை முடிவின்படி வருடம் முழுவதும் இயங்குவதை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments