Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. நாளது வரை மாநில அளவில் 170767 மாற்றுத்திறானாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தில் 1509 மாற்றுத்திறானாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது,

இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

0 Comments