Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய செய்தி: 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு- எவ்வளவு என்று தெரியுமா?- முழு விவரங்கள்

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

பேரவையில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் தேதி 294 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ரூ. 1 கோடியில் 100 இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

ரூ.137 கோடியில் 10,50,000 சுய உதவிக் குழுக்களுக்கு 21 இலட்சம் முருங்கைக் கன்றுகள், ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்படும்.

தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு.66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு ரூ.3,600லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ரூ.75 கோடியில் 5,000 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

ரூ.50 கோடியில் 1,000 ஊராட்சிகளில் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதித் திட்டம்- மகளிர், புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்படும்.

ரூ. 3 கோடியில் 100 மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் - சிறப்பு சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வழங்கப்படும்.

ரூ.1.36 கோடியில் "வானவில் மையம்" எனும் பாலின வள மையம் 37 மாவட்டங்களில் முன் மாதிரியாக அமைக்கப்படும்.

ரூ. 1 கோடியில் 100 இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

Post a Comment

0 Comments