Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உள்ளூர் விடுமுறை - பங்குனி உத்திரத் திருநாள்05.04.2023 அன்று மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை




(பங்குனி உத்திரத் திருநாள்  (பங்குனி-22) 05.04.2023 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பார்வையில் கண்டுள்ள அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 05.04.2023 அன்று தென்காரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ( Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது. 


மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் துமிருப்பின் சம்பந்தப்பட்டத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. மேலும் உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (under Negotiable Instrument Act)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்ட கருவூலம் சார்நிலைக்கருவூலங்கள் மற்றும் அரசு காப்புகள்(Government Securities) தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்குக் குறைந்தபட்சப் பணியாளர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் செயல்படும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 06.05.2023 (சனிக்கிழமை) அன்று அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments