பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி:
பாரத சாரண-சாரணியர் இயக்கத்தில் 10 லட்சம் மாணவர்களை இணைக்கவேண்டும் என்ற இலக்கில் செல்கிறோம் எனவும்,பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப் புகள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரை கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரை கலைஞர் நூலகம் திறக்கப்படும் எனவும் இதற்கான திறப்பு விழா குறித்து தமிழ் நாடு அரசு அறிவிக்கும் எனவும் நிதி நிலைமை படிப்படியாக சரிசெய்யும் பணியில் முதல்-அமைச்சர்ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 29 தேர்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது. காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் ஜி20 கல்வி கருத்தரங்கில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துகொள்கின்ற போது தேசிய கல்விக்கொள்கையில் தமிழ் நாடு அரசுக்குஇருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்