மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2018-19. ஆம் கல்வியாண்டில் 1474 முதுகலை ஆசிரியர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கியும் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2019 2020 ஆம் கல்வியாண்டில் 2449 முதுகலை ஆசிரியர் பணியிடமும், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2774 முதுகலை ஆசிரியர்முதுகலை ஆசிரியர் பணியிடமும், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2774 முதுகலை ஆசிரியர் பணியிடமும் முதுகலை ஆசிரியர் தகுதி பெற்ற நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக் கொள்ள அனுமதித்து வெளியிடப்பட்டுள்ளது. ஆணைகள் மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி
2
ஆணையரின் கடிதங்களில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 4863 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், 3105.2022 தேதியில் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை 126 எனவும், இக்காலிப் பணியிடங்களையும் சேர்த்து நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள் 4989 எனவும், இக்காலிப் பணியிடங்களில் பெரும்பாலானவை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஏற்பட்டவை எனவும், 2013 - 2014 ஆம் கல்வியாண்டிற்கு பிறகு நேரடி நியமனத்தின் வாயிலாக புதிதாக ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படாததால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததால் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு பாடத்திலும், மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் அடைவுகள் மற்றும் கற்றல் விளைவுகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், அரசு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்துள்ளதாகவும், அதற்கேற்ப சுமார் 5000 இடைநிலை ஆசிரியர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளுக்கு தேவைப்படுகின்றனர். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை தெரிவு செய்யும் நடைமுறைகளை பின்பற்றி நேரடி நியமனம் மூலம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு கால அவகாசம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாமல் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்திடலாம் எனவும், இவ்வகையில் நாளது தேதி வரை காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய அனுமதி வேண்டி தொடக்கக் கல்விஇயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்