Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)- டிசம்பர் 2022 - தேர்விற்கான அறிவுரைகள் வழங்குவது குறித்து. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம்

பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில் தெரிவித்தவாறு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 17.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் (இணைப்பு பள்ளிகளுடன்) ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 17.12.2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.

2. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) Bilingual முறையில் ஒரே வினாத்தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிட்டு வழங்கப்படும்.

3.தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாட்கள் மற்றும் OMR விடைத்தாட்கள் (அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து) பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

4. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு குறைவாகவோ அல்லது அதற்கு மேலோ ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக்கூடாது. (கடைசி அறை தவிர)

5. வினாத்தாள் கட்டுகள் தேர்வு மையத்தில் காலை 8.45 மணிக்குள் சென்றடையும் வண்ணம், வழித்தட அலுவலர் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வாடகை வாகனம் மூலம் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


Post a Comment

0 Comments