Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் -இளைஞர்கள், பெண்களுக்கான சூப்பரான வாய்ப்பு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் வரும் 27ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை)

இடம்: மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,  பொள்ளாச்சி

பங்குபெறும் நிறுவனங்கள் உற்பத்தி துறை, ஜவுளித்துறை,  இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை (தகவல் துறை), ஆட்டோ மொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.



Post a Comment

0 Comments