இளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் பதவி உயர்வுக்கு பணி மூப்பு பட்டியல்.
2025-2026ஆம் ஆண்டிற்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டின் படி 15.03.2025 நிலவரப்படியான தேர்ந்தோர் பட்டியல் தயார்செய்யப்பட்டு பார்வையில் காணும் 06.06.2025 நாளிட்ட இவ்வியக்க செயல்முறைகளின் வாயிலாக பதவிஉயர்வு/பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உதவியாளர் பணியிலிருந்து 2% பட்டதாரி ஆசிரியர்/முதுகலை ஆசிரியராக சென்றது / துறை மாறுதல் மூலம் சென்றது போன்ற காரணங்களினால் ஏற்பட்டுள்ள கூடுதல் காலிப்பணியிடங்கள் பதவிஉயர்வு / பணி மாறுதல் மூலம் நிரப்ப வேண்டியுள்ளது
எனவே, 15.03.2025 நிலவரப்படி உதவியாளர் பதவிக்கு பதவிஉயர்வு /பணி மாறுதல் வழங்க 29.05.2025 நாளிட்ட செயல்முறைகளின் படி வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் வரிசை எண்.146 வரையுள்ள நபர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரிசை எண்.147 முதல் 396 வரையிலான நபர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இதனை பட்டியலில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவித்து பெயர் சேர்க்கை/நீக்கம்/திருத்தம் ஏதும் இருப்பின் உரிய அலுவலரின் சான்றுகளுடன் மாவட்ட வாரியாக தொகுத்து இவ்வியக்கக அ4 பிரிவின் ιισόοιο τρक (cosea4sec@gmail.com) ஒரு வார காலத்திற்குள் விவரங்களை அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கால தாமதமாக பெறப்படும் பரிந்துரைகளால் ஏற்படும் நிருவாக சிக்கல்கள் மற்றும் இதில் எவரது பெயரேனும் விடுபட்டதாக பிற்காலங்களில் அறியப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட பணியாளர்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
| PDF FILE DOWNLOAD |
|---|
| FULL DETAILS CLICK HERE |

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்