Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB TODAY LATEST NEWS - டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

TRB LATEST NEWS - டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி
ஆசிரியர் தேர்வு வாரிய 14.02.2025 மற்றும் 17.03.2025 நாளிட்ட பத்திரிக்கைச் செய்தியின்படி அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி) பணியிடங்களுக்கான தேர்வு 2025 ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் CBT மூலம் காலை/மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது.

தற்போது, தேர்வர்களின் Response sheet மற்றும் Objection Tracker ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான https://trb.tn.gov.in/ -ல் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் அவர்களின் Response Sheet-ஐ இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது Objection Tracker-ல் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய Master Question Paper-ல் உத்தேச தற்காலிக விடைக்குறிப்புகள் () குறியீடு செய்யப்பட்டுள்ளன. எனவே. தேர்வர்கள் அவர்களது Response Sheet-ன் அடிப்படையில் உத்தேச விடைக்குறிப்புகளை ஏதேனும் ஆட்சேபணை (Objection) தெரிவிக்க விரும்பினால் இணையவழி மூலமாக மட்டுமே 16.04.2025 பிற்பகல் முதல் 21.04.2025 இரவு 08:00 மணி வரை ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும்.

தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை (objection) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் (Standard Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் (Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது, அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments