Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி

மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி

ஆதிதிராவிடர், னர் பழங்குடியி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து,தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972 முதல் 2003 ஆண்டு வரையிலான காலங்களில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட அனைத் துப் படிப்புகளுக்கும், 2003 முதல் 2010 ஆண்டு வரை மருத்துவம் மற் றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் கல்விக் கடனாக ரூ.48.95 கோடி வழங் கப்பட்டது. இந்தத் * தொகையை மாணவர்க ளிடமிருந்து வசூலிக்க ஏ இயலாத நிலையும், வசூ லிக்க சரியான பதிவேடு கள் மற்றும் விவரங்கள் ஏதும் இல்லாத நிலையும் உள்ளது. அத் துடன் வசூலிக்க வேண்டிய நபர் களை அடையாளம் காண இய லாத நிலையும் உள்ளது.

எனவே, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனான ரூ.48.95 கோடியை, சிறப்பினமா கக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments