Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மத்திய பட்ஜெட் 2025 - முக்கியத் துறைகளில் கவனிக்கத்தக்க அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் 2025 - முக்கியத் துறைகளில் கவனிக்கத்தக்க அறிவிப்புகள் 

புதிய வழிமுறையின் கீழ் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது

தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள், நடுத்தர வகுப்பினர் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது

ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வரி கிடையாது (ரூ .75000 நிலையான விலக்குடன் சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு ரூ .12.75 லட்சம்)

புதிய வரிமுறை நடுத்தர வகுப்பினரின் வரி செலுத்துதலை கணிசமாகக் குறைத்து, அவர்களது அன்றாட நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும்

வரி செலுத்துவோர் அனைவரும் பயனடைவதற்காக வரம்புகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன


விவசாய துறை:
பிரதம மந்திரி தன் தானியா கிருஷி யோஜனா எனும் வேளாண் திட்டத்தின் கீழ்100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

பிகாரில் மக்கானா (தாமரை விதை) வாரியம் அமைக்கப்படும்.

அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம் தொடங்கப்படும்.

தொழில்துறை: 

முதல்முறையாக தொழில் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ.2 கோடி வரையிலான கடன் வழங்கப்படும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

உலகளவில் பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா மையமாக உருவெடுக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் ரூபாய் 30,000 வரை கடன் பெற கடன் அட்டை வழங்கப்படும்.

கல்வி:
அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள்.

பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்க 50 ஆயிரம் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள்.

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பிராட்பேண்ட் வசதி.

மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் பாட புத்தகங்கள் வழங்க திட்டம்.

2024ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 5 ஐஐடி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள்

Post a Comment

0 Comments