சிபிஎஸ்இ பாடத்திட் டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான 2026ம் கல்வி ஆண் டின் பொதுத் தேர்வு வரைவுத்திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020ல் சேர்த்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 15ம் தேதி தொடங்கி நடக்கிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை 2020ல் மேற் கண்ட வகுப்புகளுக்கான 2026ம் ஆண் டுக்குரிய தேர்வுகளை எப்படி நடத்த வேண்டும் என்ற வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு களுக்கான தேர்வுகள் தொடரும் அதே நேரத்தில் பயிற்சி வகுப்புகளை நடத் துவதற்கான அவசியத்தை நீக்குவதற் காக, தற்போதுள்ள பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வு முறைகள் மீள் வடிவமைக்கப்படும். இதன் மூலம் தற் போதைய மதிப்பீட்டு முறையில் உள்ள தீங்குகளை மாற்றி அமைக்கவும், முழு மையான மேம்பாடுகளை ஊக்குவிக்க முடியும். மனப்பாடம் செய்வது போன்ற முறைகளை தவிர்த்து மாணவர்கள் முதன்மையான மற்றும் முக்கியமான திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். அனைத்து மாணவர்களும், (ஒரு முக்கிய பாடத்தேர்வையும் மற்றும் மேம்பாட்டு தேர்வும் எழுத விரும்பினால்) எந்த கல்வியாண்டிலும் இரண்டு முறை பொதுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக் கப்படுவார்கள்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்