Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரிப்பு

தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரிப்பு 
அதிகரிக்கும் 'ஸ்கரப் டைபஸ்' தொற்று..

'Orientia tsutsugamushi' ஒட்டுண்ணியால், 'Scrub Typhus' தொற்று பாதிப்பு ஏற்படும். இதனால் உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்கள் ஏற்படும்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


விவசாய தொழிலில் ஈடுபடும் நபர்கள், புதர் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

காய்ச்சல், உடல் வலி, தலை வலி, கருப்பு நிற கொப்புளம் இவற்றின் அறிகுறிகள். 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் IgM antibody, ELISA 2 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை எடுக்கவில்லை எனில் உயிரிழப்பு நிகழலாம். சிகிச்சைக்கு Azithromycin, Doxycyline மருந்துகள் பயன்படுத்தப்படுகிறன.

Post a Comment

0 Comments