Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: பள்ளிகளுக்கு நாளை (25.01.25) வேலை நாள்

பார்வையில் காணும் அரசாணைக்கிணங்க 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14.01.2025 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக்கருத்தில் கொண்டு 17.01.2025 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்துக்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அனைத்துக்கல்வி அலுவலகங்களுக்கும் பணி நாளாகும். எனவே அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அனைத்துக்கல்வி அலுவலகங்களும் செயல் படவேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments