Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN NEWS -முதல்வர் கணினி தமிழ் விருது தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

TN NEWS -முதல்வர் கணினி தமிழ் விருது தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச் சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெ லாம் கணினிவழித்தமிழ்மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்கு விக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதல்வர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ. 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.

இந்த 2024-ம் ஆண்டுக் குரிய முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தனியார் மற்றும் நிறு வனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படு கின்றன. விருதுக்கு அனுப்பப் படவுள்ள மென்பொருள்கள் 2021, 2022, 2023 ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதி முறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் 'www.tamilvalarchit hurai.tn.gov.in न தளத்தில் இலவசமாக பதிவி றக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிச.31-க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 - 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத் தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும். என இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Post a Comment

0 Comments