இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்கள், 3 பெண்கள் என 28 ஊர்க்காவல் படை பணியிடங்களையும், 7 (ஆண்கள் மட்டும்) மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை பணியிடங்களையும் நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்க்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு வருகிற 02.12.2024 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் படிப்பு சான்றிதழ், வயது நிரூபணத்திற்கான சான்றிதழ், வேலை/தொழில் விபரத்துடன் கூடிய சுயவிபர குறிப்பு (Bio-Data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2), அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் வர வேண்டும் என்றும், மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிப்பவர்களாக இருப்பின் மீனவ இளைஞர் என்பதற்கான அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்