ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவி பெறும் /அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (SPECIAL TNTET -2) (தாள் - I மற்றும் தாள் - II) நடத்துவதற்கான அறிவிக்கை TRB (Website: http://www.trb.tn.gov.in) 26.10.2026 இன்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து பணிபுரிந்து வர வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 27.10.2026 முதல் 19.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்