இரவு 9.51 மணிக்கு உயிர் பிரிந்ததாக தெரிவிப்பு
மன்மோகன் சிங் நினைவலைகள்
கடந்த 1932 செப்., 26ல் அன்றைய பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.
பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பேராசிரியராகவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார்.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனர், அயல்நாட்டு பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலராகவும் பதவி வகித்தார்.
ரிசர்வ் வங்கியின் தலைவராகவும், 1991-1996 காலகட்டத்தில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
கடந்த 2004-2014 காலகட்டத்தில் இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் (வயது 92] இன்று காலமானார்.
தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்-ன் இழப்பிற்காக இந்தியா துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான பின்புலத்தில் இருந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.”-நரேந்திர மோடி, இந்திய பிரதமர்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்