Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education: 2025-26 ஆம்‌ கல்வியாண்டு - முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ வழங்க- DEE உத்தரவு

Education: 2025-26 ஆம்‌ கல்வியாண்டு - முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ வழங்க- DEE உத்தரவு

பார்வை (1)-ல் காணும் அரசாணையின்படி, 2012 2013 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப்பட்டியல், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கும் (தொடக்கக்கல்வி) கல்வி மேலாண்மைத் தகவல் (EMIS) மையத்தின் மூலம் 27.12.2024 அன்றைய நிலவரப்படி மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை பெறப்பட்டு சென்னை-32, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments