Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

CEO MEETING: கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை

CEO MEETING: கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை
பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இதுபோன்று பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கமுடியும்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான பணி ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெருமிதம்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், பாப்பம்பட்டி பிரிவு, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில், இன்று(16.12.2024) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பணிஆய்வுக் கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் திருமதி.சோ.மதுமதி இ.ஆ.ப, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் திரு.ஆர்.சுதன் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் LIITLQ இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப. முன்னாள் அமைச்சர் / கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியின் நிறுவன தலைவர் திரு.பொங்கலூர் நா.பழனிச்சாமி, பள்ளிக்கல்வி இயக்கக இயக்குநர்கள் மரு.எஸ்.கண்ணப்பன், திரு.பழனிசாமி, திரு.நரேஷ், திரு.குப்புசாமி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (SCERT) இயக்குநர் திருமதி.உமா, மாநில கூடுதல் திட்ட இயக்குநர்(சமக்ரா சிக்ஷா திட்டம்) திருமதி உமா, அரசு தேர்வுத் துறை இயக்குநர் திருமதி.லதா, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்(ஓய்வு) திரு.அறிவொளி, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் திருமதி.இந்துமுருகேசன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசியதாவது,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பணி

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். புதுமைபெண் திட்டம், காலை சிற்று திட்டம், தமிழ்புதல்வன் திட்டம். என எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியையும். சுகாதாரத்தையும் தனது இரண்டு கண்களாக பார்க்கின்றார்கள். அனைவரும் இணைந்து ஒரு சிறந்த கல்வி கட்டமைப்பை உருவாக்கி கொண்டு இருக்கிறோம். பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறனை மேலும் மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது.

அரசின் சார்பில் பள்ளிக்கல்வித் துறையில் கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா, விலையில்லா பொருட்கள் மாணவர்களை சென்றடைகிறதா, குறிப்பாக மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் முறையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் இந்தஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அனைத்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துவதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருகின்ற மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றதோ அந்த மாவட்டத்திற்கு பாராட்டுக்களையும், எந்த மாவட்டங்கள் குறைவான செயல்பாட்டினை கொண்டுள்ளனவோ அதற்கான காரணங்கள் குறித்தும், ஆய்வு செய்து. வருங்காலங்களில் அதன்செயல்பாட்டினை மேம்படுத்தி ஊக்கப்படுத்துவதற்கும், இதுதொடர்பாக அனைவரின் கருத்துக்களை பரிமாற்றம் செய்வதற்கும். சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை பதிவிடவும். இரண்டுநாட்கள் இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது. இக்கூட்டத்தில் வழங்கப்படுகின்ற அறிவுரைகளை முதன்மைகல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள தலைமையாசிரிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவேண்டும்.

நடைபெறவுள்ள 10 ஆம்வகுப்பு. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கவும், தேர்ச்சி பெறாத மாணவர்களை தேர்ச்சிப்பெற செய்யவும், போதிய நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.

அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் உயர்தர ஆய்வகங்கள் கொண்டுவருவதற்கும், கணினிகளில் பழைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் எல்லாம் மாற்றப்பட்டு, தற்போது என்னமாதிரி புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் உள்ளதோ அவற்றை பயன்படுத்தவும், ஏற்கனவே உள்ள உயர்தர ஆய்வகங்களில் எந்த பொருட்கள் எல்லாம் அதிக நாள் பயன்பாட்டில் உள்ளதோ அவற்றிற்கு பதிலாக புதியவற்றை மாற்றவும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு புதிய உயர்தர ஆய்வகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுபோன்று அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில் மாணவ மாணவியர்களின் தேர்ச்சிவிகிதம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

Post a Comment

0 Comments