அரையசன்னை, தேர்வு 27 விடுமுறையில்தனியார்பள் ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இரண் டாம் பருவத் தேர்வு அரை யாண்டுத் தேர்வு முடிவ டைந்த நிலையில், டிச.24 முதல்ஜன.1 வரை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் ஜன.2 ஆம் திறக்கப்படவுள்ளன.
இந்தநிலையில்தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள தனியார் மெட் ரிக்குலேஷன் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. மேலும் சென்னையில் உள்ள சில தனியார்பள்ளிகளில் மாணவர்கள் நேற்று நடைபெற்ற சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் அரை யாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும்விதிமுறையை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்கதங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனியார்பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்