பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் தற்போதைய வேளையில், பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சினை, சரும வறட்சியும், உதடு வறட்சியும்.
குறிப்பாக, உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு, முக அழகை பாதிக்கும். உணவு சாப்பிட முடியாத நிலையையும் உண்டாக்கும்.
ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தியே, உதடு வெடிப்பை தவிர்க்கலாம்.
தண்ணீர்
உதடுகள் வறண்டு போகாமல் இருக்க வேண்டு மானால், தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் சீராக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம், உதடுகள் ஈரப்பதத் துடன் இருப்பதோடு, உடலும் நீரேற்றத்துடன் ஆரோக் கியமாக இருக்கும்.
தேன்
தேன் ஒரு மிகச்சிறந்த இயற்கை ஈரப்பத மூட்டி ஆகும். தினமும் இரவு தூங்கும் முன் உதடுகளில் தேன் தடவி, சிறிதுநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் உதடு களை கழுவி வந்தால் அவை மென்மையாக வும், வறண்டு போகாமல் அழகாகவும் இருக்கும். உதடுகளில் வெடிப்பு இருந்தால், விரைவில் குணமாகும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவி புரியும். அதுவும் உதடு வறட்சி அதிகமாக இருந்தால், தேங்காய் எண்ணெயை அடிக்கடி உதடுகளில் தடவிவர வேண்டும். முக்கியமாக, இரவுதூங்கும் முன் உதடுகளில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தால், காயங்கள் விரைவில் ஆறி, உதடுகள் அழகாக இருக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இந்த கற்றாழை ஜெல்லை உதடு களில் தினமும் தடவி வருவதன் மூலம், உதடுகளில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு போன்றவை தடுக்கப்பட்டு, அவை அழகாக இருக்கும்.
ரோஜா இதழ்கள்
ரோஜாப்பூ இதழ்களில் உள்ள இயற்கை எண்ணெய்உதடுகளுக்கு நல்ல ஈரப்பதத்தை அளித்து, உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். சிறிது ரோஜாப்பூ இதழ்களை பாலில் ஊற வைத்து, பின் அதை அரைத்து விழுதாக தயாரித்து, உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், உதடுகள் மென்மையாகும்.
சர்க்கரை 'ஸ்கிரப்'
உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உதடுகளை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால், சர்க்கரை ஸ்கிரப்பை பயன் படுத்தலாம். அதற்கு சிறிது சர்க்கரையை எடுத்து தேன் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து விழுதாக தயாரித்து, உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்து வெதுவெதுப் பான நீரில் கழுவ வேண்டும்.
சியா வெண்ணெய்
சியா வெண்ணெய், வறண்டு, வெடிப்புகளுடன் இருக் கும் உதடுகளை, உடனே சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. அதற்கு தினமும் இரவு தூங்கும் முன் சிறிது சியா வெண்ணெயை உதடுகளில் தடவி வர வேண்டும். இப்படி செய்யும்போது உதடுகள் மென்மையாகவும், அழகாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்