Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட ஏற்பாடு

தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட ஏற்பாடு

தமிழகத்தில், 35 தனியார்மருத்துவமனைகளில்,ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, பொது சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ், மொத்தம், 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. இத் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும், 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இதில், முதல் தவணைக்கு பின் அடுத்த தவணையை, சில குழந்தை களுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, விடுபட்ட குழந்தைகளுக்கு நாளை வரை, தடுப்பூசி போடும் முகாம் உள்ளது. நடைபெற உள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளை போல, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை களிலும், இலவசமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறிய தாவது:

ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதேபோல, பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, 35 தனி யார் மருத்துவமனைகள் இலவசமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன.

அந்த மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய பேச்சு நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments