Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் களஞ்சியம் செயலி பயன்பாடு (விடுப்பு, ஓய்வூதிய திட்டம் / பங்களிப்பு ஓய்பூதிய திட்டம், கடன்) - சார்பாக- வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் களஞ்சியம் செயலி பயன்பாடு (விடுப்பு, ஓய்வூதிய திட்டம் / பங்களிப்பு ஓய்பூதிய திட்டம், கடன்) - சார்பாக- வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித்துறை அனைத்து அலுவலகங்கள், அரசு / உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் களஞ்சியம் செயலி பயன்பாடு (விடுப்பு, ஓய்வூதிய திட்டம் / பங்களிப்பு ஓய்பூதிய திட்டம், கடன்) - சார்பாக.

பார்வை:

01. சென்னை, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 055365/2/1/2024, நாள் 16.08.2024, 26.09.2024, 11.11.2024, 04.12.2024 5 18.12.2024.

02.20.12.2024 அன்று சம்பளக் கணக்கு அலுவலரால் (தெற்கு) நடத்தப்பட்ட Webex கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்.

பார்வை (1) இல் காணும் செயல்முறைகளில் 16.08.2024 நாளிட்ட கடிதத்தின் மீது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலரிகளின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு அலுவலகங்களில் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் துய்க்கும் பல்வேறு வகையான விடுமுறை பதிவுகள், ஓய்வூதிய பயன்கள் (OPPAS), பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் (OCPS) கருத்துருக்கள், அனைத்து வகை தெரிவிக்கப்பட்டது. முன்பணங்கள் மற்றும் Pay Slip ஆகியவற்றை பெறவேண்டும் என

அதனை பின்பற்றும் வகையில் நமது கல்வித்துறையிலும் அனைத்து நிலை அலுவலர்கள் / பணியாளர்களும் களஞ்சியம் செயலியை பயன்படுத்திட தெரிவித்து இவ்வியக்ககம் வாயிலாக பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் இச்செயலியினை முழுவதுமாக பயன்படுத்தவில்லை என கரூவூலகக் கணக்குத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1. களஞ்சியம் செயலி குறித்த பயிற்சி பெற பணியாளர்கள் /அலுவலர்கள் விபரத்தினை இதுவரை அனுப்பிடாத மாவட்டங்கள் உடன் அனுப்பிட வேண்டும்.

2. அனைத்து நிலை அலுவலர்களும் / ஆசிரியர்களும் / பணியாளர்களும் 100 சதவிகிதம் செயலி பதிவுறக்கம் செய்வதுடன் செயலியினை விடுமுறை விண்ணப்பிக்க, ஓய்வூதிய பயன்கள் (OPPAS) கோரிட, பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் (OCPS) கருத்துருக்கள் அனுப்பிட அனைத்து வகை முன்பணங்கள் மற்றும் Pay Slip கோரிட பயன்படுத்திட வேண்டும்.

3. அனைத்து நிலை அலுவலர்களும் / ஆசிரியர்களும் / பணியாளர்களும் தங்களது பிரதிமாத Pay Slip னை செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலமாக இச்செயலியின் பயன்பாடு (Usage of mobile Kalanjiyam App) 100 சதவிகிதம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் பெற்று வழங்கு அலுவலர்களுக்கு இதனை வலியுறுத்துவதுடன் இது சார்ந்த முன்னேற்றம் தொடர்பாக தொடர் கண்காணிப்பு செய்திட வேண்டும்.

4. பண்டிகை முன்பணம் (Festival Advance) இச்செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

5. அனைத்து வகையான விடுப்புகளும் இச்செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments