Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான ஆள் தேர்வு- அறிவிப்பு

ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான ஆள் தேர்வு நடைபெற உள்ளது.


தகுதியுள்ளவர்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள ஆண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:-

விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45 க்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி:- SSLC

இருப்பிட தகுதி -

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், அவரது இருப்பிடமானது. திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் இருத்தல் வேண்டும்.

பொது தகுதி :-

பொதுநல சேவை, தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுடையவராக இருத்தல் வேண்டும்.

மேற்படி தகுதிகள் உள்ள அனைவரும் https://bit.ly/3ZNfZoT என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவண நகல்கள் -

பிறப்புச் சான்றிதழ்

ஆதார் அட்டை

கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள்

தற்போதைய புகைப்படம்-2 (Passport Size Photo)

விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் :- 15.01.2025

Post a Comment

0 Comments