Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாநில அளவில் திருக்குறள்- 2024 வினாடி வினா நடத்துதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றல் அனுமதி கோரப்பட்டது - தொடர்பாக

மாநில அளவில் திருக்குறள்- 2024 வினாடி வினா நடத்துதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றல் அனுமதி கோரப்பட்டது - தொடர்பாக.
பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது. அக்கடிதத்தில் கோரப்பட்டவாறு, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியினை டிசம்பர் 2024 மூன்றாவது வாரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடத்திட தங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், தாங்கள் மாநில அளவில் ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படவும், இந்நிகழ்ச்சிக்கு அனைத்து மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

2. இந்நிகழ்ச்சியினை நடத்த தேவைப்படும் நிதி குறித்த (பரிசுத்தொகை உட்பட) உரிய முன்மொழிவினை அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கும்படி தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Post a Comment

0 Comments