Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS - பொங்கல் பரிசு போல் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு-தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை

LATEST NEWS - பொங்கல் பரிசு போல் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு-தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம் ஆகும். வேஷ்டி, சேலை, பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ரொக்க பணமும் அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூபாய் ஆயிரம் ரொக்கம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் ரொக்க பணத்துடனே பொங்கல் பரிசு வழங்கபட்டது.


இந்நிலையில் பொங்கலுக்கு வழங்குவது போல், ரேஷன் கடைகளில் தீபாவளிக்கும் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.


இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.





Post a Comment

0 Comments