Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

அக்.10 முதல் 29 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு முகாம் அக்.10 முதல் 29-ஆம்தேதி வரை 10 நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிக ளுக்கான கல்வி, மருத்துவ மதிப் பீட்டு முகாம் 10 மண்டலங்க ளில் நடைபெறவுள்ளது. அதன்படி, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட மாற்றுத்திற னாளி குழந்தைகளுக்கு அரத் தூண் சாலையில் சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் அக்.10-ஆம் தேதி, பெரம்பூர் மண்டலத்துக்குள்பட் டவர்களுக்கு பெரம்பூர் பல்ல வன் சாலை டிவிகே நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி யில் அக்.15-ஆம் தேதி, புரசை வாக்கம் மண்டலத்துக்குட்பட்டவர்களுக்கு செனாய்நகர் புல்லா அவென்யூவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் அக்.16- ஆம் தேதி நடைபெறும் முகாம்க ளில் கலந்துகொள்ளலாம்.

இதேபோல,திருவல்லிக்கேணி மண்டலத்துக்குட்பட்டவர்க ளுக்கு அம்பத்தூர்வடக்கு பூங்கா தெரு பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்.17-ஆம் தேதி,எழும்பூர் மண்டலத்துக்குட்பட் டவர்களுக்கு நுங்கம்பாக்கம், பள்ளித்தெரு, ராஜாஜி தெருவில் உள்ள சென்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் அக்.18-ஆம் தேதி, தியாகராயர் நகர் மண்ட லத்துக்குட்பட்டவர்கள் அசோக் நகர், மேற்கு மாம்பலம் 3-ஆவது அவென்யூவில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் அக்.22-ஆம் தேதி நடைபெறும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்.

அடையாறு மண்டலத்துக் குள்பட்டவர்கள் நந்தனம், சிஐடி நகர், 4-ஆவது பிரதான சாலை யிலுள்ள சென்னை தொடக் கப் பள்ளியில் அக்.23, மயிலாப் பூர் மண்டலத்துக்குட்பட்டவர் கள் அடையாறு, இந்திரா நகர், 29-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் அக்.24, ஜார்ஜ்டவுன் மண்டலத்துக்குட்பட்டவர்கள், புதிய வண்ணாரப்பேட்டை டி.எச் தர் ஹக்-இல் உள்ள சென்னை மேல் நிலைப் பள்ளியில் அக்.25, பெரி யமேடு மண்டலத்துக்குட்பட்ட வர்கள் புழல் பொப்புலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.29-ஆம் தேதி நடைபெறும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்.

முகாமுக்கு வருவோர் குழந்தை களின் 4 புகைப்படம், வருவாய் சான்றிதழ், ஆதார் அட்டை, மருத்துவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை நகல் ஆகி யவற்றை எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments