Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துாஜ் இ.ஆ.ப. அவர்கள் தகவல்!!!

திருப்பூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 02ஆம் நாள் மகாத்மா காந்தி, 14ஆம் நாள் ஜவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 23.10.2024 மற்றும் 24.10.2024 ஆகிய நாள்களில் திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள் மேனிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தபட உள்ளன.

சத்திய சோதனை, காந்தியடிகளும் அறப்போராட்டமும், மதுரையில் காந்தியடிகள் என்ற தலைப்புகளில் மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி (பள்ளி), காந்தியடிகளின் தண்டியாத்திரை. அண்ணலின் வரலாற்றில் தமிழகத்தின் பங்கு. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற தலைப்புகளில் மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி (கல்லூரி), ஆசிய ஜோதி. மனிதருள் மாணிக்கம், ரோசாவின் இராசா என்ற தலைப்புகளில் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி (பள்ளி), விடுதலைப் போராட்டத்தில் நேரு, நேருவின் பஞ்சசீலக் கொள்கை, ஸ்ரநேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் என்ற தலைப்புகளில் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி (கல்லூரி) நடைபெறவுள்ளது.

பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் கீழ்நிலையில் நடத்தி மாணவர்களைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில் / அஞ்சலில் அல்லது ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலில் 18.10.2024ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000/-. இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டுபேரைத் தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை வீதம் வழங்கப்பெறவும் உள்ளன. -2000/-

பள்ளிப் போட்டி காலை 10.00 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 02.00 மணிக்கும் தொடங்கப்பெறும். இப்போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments