Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் -தருமபுரி மாவட்டம்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 05-10-2024 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும்,

சிறப்பு அம்சங்கள்

100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்

10000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பம், தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டுதல்கள்

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ & பொறியியல்

விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio-Data) ஆகியவற்றின் நகல்கள், முகாம் அன்று நேரில் கொண்டு வரவேண்டும்.

தொடர்புக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தருமபுரி,

04342-288890

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட “இணையதள" முகவரிகளில் தங்கள் விபரங்களை முன்பதிவு  www.tnprivatejobs.tn.gov.in.

Post a Comment

0 Comments