Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருத்தப்பட்ட பள்ளி நாள்காட்டி: சனிக்கிழமை வகுப்புகள் குறைப்பு

திருத்தப்பட்ட பள்ளி நாள்காட்டி: சனிக்கிழமை வகுப்புகள் குறைப்பு
பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருத்தப்பட்ட நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமை வேலை நாள்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2024-2025) நாள்காட்டியை பள் ளிக் கல்வித் துறை கடந்த ஜூன் 8-ஆம் தேதி வெளியிட்டது. அதில் 220 நாள்கள் பள்ளி வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டன. மேலும், 19 சனிக் கிழமைகள் பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத னால் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் வேலை நாள்களை குறைக்க வேண்டுமென பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, பள்ளி வேலை நாள் களின் எண்ணிக்கையை 210 நாள்களாகக் குறைத்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது திருத்தப்பட்ட கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதில், 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என இருந்ததை மாற்றி, 4 சனிக்கிழமைகளில் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 2 சனிக்கிழமை வகுப்புகள் முடிந்து விட்டன. 

மேலும், பழைய நாள்காட்டியில் பள்ளி இறுதி வேலை நாள் ஏப் ரல் 25-ஆம் தேதியாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலை நாள்கள் 210 தினங்க ளுக்குக் குறையாமல் பார்த்துக்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு கல்வித் துறை அறுவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments