விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
5.தெரிவு முறை:-
அ) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும். தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆ) விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்குக் கட்டாயமாக நேரில் வருகை புரியவேண்டும். நேர்முகத் தேர்விற்கு வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் மேற்படி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். இதுதொடர்பாக எந்த உரிமையும் கோர இயலாது. நேர்முகத் தேர்விற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதை மட்டுமே காரணமாக வைத்து உரிமை கோர இயலாது.
இ) விண்ணப்பதாரர்களை சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது அதிக மொத்த மதிப்பெண் பெற்றவர்கள் இனச்சுழற்சியைப் பின்பற்றி அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்த சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவர். குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் அவர்கள் விரும்பிய சங்கத்திற்கு ஒதுக்கீடு கிடைக்காமல் போகலாம். அத்தகைய நேர்வில் அந்த சமயத்தில் அவர்களது இனச் சுழற்சிக்கு எந்த சங்கத்தில் காலிப் பணியிடம் இருக்கிறதோ அந்த சங்கத்திற்கு அவர் ஒதுக்கீடு செய்யப்படுவார்.
ஈ) விண்ணப்பதாரர்களின் தகுதி குறித்த அனைத்துச் சான்றிதழ்களையும், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் ) ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனைத்துச் சான்றிதழ்களையும் சரி பார்த்த பின்னரே தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.
உ) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தெரிவு மற்றும் சங்கத்திற்கு ஒதுக்கீடு ஆணை (Selection and allotment order) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் வழங்கப்படும். அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சங்கத்தின் தகைமை வாய்ந்த அலுவலரால் பணியமர்வு ஆணை (Appointment order) வழங்கப்படும்.
ஊ) முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் இராணுவத்தினருக்கான
இட ஒதுக்கீடு முறை பொருந்தாது.
6. காலிப் பணியிடங்களுக்கான விருப்பம் தெரிவித்தல்
விண்ணப்பதாரர்கள். தாங்கள் எந்த நிறுவனத்தின் நியாய விலைக் கடைக்கு
பணியமர்த்தப்பட வேண்டும் என்பதற்கான விருப்பத்தை நேர்முகத் தேர்வின்போது தெரிவிக்க
வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒரு முறை விருப்பம் அளித்த பிறகு விருப்பத்தினை
மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையில்
அவர்களுக்கான பணியிடம் ஒதுக்கப்பட இயலாத நிலை ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு
நிலையத்தின் முடிவின்படி அவர்களுக்குப் பணியிடம் ஒதுக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட
ஆள்சேர்ப்பு நிலையத்தால் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. இதற்காக தனியாக கலந்தாய்வு
(Counselling) ஏதும் நடைபெறாது.
7. விண்ணப்பிக்கும் முறை:-
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் www.vnrdrb.net என்ற
இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ
அல்லது தபாலிலோ விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்
முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அ) விண்ணப்பப் படிவங்கள் இணையதளம் மூலம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும்.
8. விண்ணப்பக் கட்டணம்:-
அ) விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packer) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-ஆகும்.
ஆ) ஆதிதிராவிடர். பழங்குடியினர். அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள். மூன்றாம் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. பாலினத்தவர்கள்
(இ) விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
ஈ) முன்னாள் இராணுவத்தினரைப் பொறுத்தவரை முதல் இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
உ) விண்ணப்பக் கட்டணத்தை Online மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இணையவழி கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கும் தோல்விகளுக்கும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.
ஊ) கட்டணம் செலுத்தும் முறையை எந்த நேரத்திலும் மாற்றி அமைக்கும் உரிமை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு உண்டு.
எ) ஒருமுறை செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.
9. நேர்முகத் தேர்வு:-
அ) தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும். நேர்முகத் தேர்விற்கு அழைப்புக் கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தங்கள் சொந்த செலவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
ஆ) நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர்ப்பட்டியல் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.
இ) நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் (E-Mail) / குறுஞ்செய்தி (SMS)மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்முகத் தேர்விற்கான அழைப்புக்கடிதங்களை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அழைப்புக் கடிதத்துடன் வராத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஈ) நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் மதிப்பு (weightage for academic marks) மற்றும் நேர்முகத் தேர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள் முறையே 50:50 என்ற விகிதத்தில் இருக்கும்.
முக்கிய குறிப்பு:-
2020-2021-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறிப்பிடப்படாமல் ஒவ்வொரு பாடத்திற்கும் எதிராக மதிப்பெண் குறிப்பிடாமல் வெறும் PASS என்று குறிப்பிட்டு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்கள் படித்த பள்ளியில் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழினை அந்தத் தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்று (மொத்த மதிப்பெண்கள், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு) அதனை, 10-ஆம் வகுப்பு PASS என்று வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்தகைய நேர்வுகளில் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழினையும் இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை அறியவும். இத்தகைய நேர்வுகளில் 10-ஆம் வகுப்புக்கு பதிலாக விண்ணப்பதாரர்களின் 9-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே உரிய மதிப்பு வழங்கப்படும்.)
உ) நேர்முகத் தேர்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் அவற்றின் நகல் ஒன்றுடன் தவறாமல்
கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வருகைபுரியாத விண்ணப்பதாரர்கள் எந்த நிலையிலும், இது தொடர்பாக எந்த உரிமையும், கோர இயலாது.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
10.தடையில்லா சான்றிதழ்:-
விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பணியாற்றுபவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்
பணியாற்றும் அலுவலகத்தில் இருந்து தேவையான தடையில்லா சான்றிதழினை நேர்முகத்
தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
11. இதர நிபந்தனைகள்
அ) நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளார் என மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தெரிவு செய்யப்பட்ட ஒரு விண்ணப்பதாரர் அப்பணிக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் அனைத்தையும் முழுமையாகப் பெற்றிருக்கவில்லையென பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது தெரிவு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் இரத்து செய்யப்படும்.
ஆ) நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு அவ்வாறு நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதை மட்டுமே காரணமாக வைத்து பணிநியமனம் கோர உரிமை கிடையாது.
இ) காரணம் எதுவும் தெரிவிக்காமல் இந்த அறிவிக்கையை இரத்து செய்வதற்கு / திரும்பப்பெறுவதற்கு / திருத்துவதற்கு / கெடு தேதியை நீட்டிப்பதற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு உரிமையுண்டு.
ஈ) விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பாக இணையதளத்தில் உள்ள "விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை (Instructions to the candidates)பகுதியை கவனமாகப் படித்து தெரிவு செய்யப்படுவதற்குரிய நிபந்தனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உ) விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான வசதி நிறுத்தப்படும்.
20) விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.vnrdrb2022@gmail.com என்ற இ-மெயில் மூலம் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மின்னஞ்சல் முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
உதவி மையம் தொடர்பு தொலைப்பேசி எண்: 04562-290769.
எ) விண்ணப்பதாரர்கள் தெரிவுக்கு விண்ணப்பிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாள்வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நேரும் போது, விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதில் தாமதமோ அல்லது தொழில் நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது.
மேற்கூறிய தொழில்நுட்பக் காரணங்களால் அல்லது வேறுகாரணங்களால்,விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கடைசிக் கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தியது தொடர்பான பிரச்சனை குறித்து ஏதேனும் முறையீடு செய்வதாயின் அப்பிரச்சனை ஏற்பட்ட 3 நாட்களுக்குள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திடம் உரிய காரணங்களுடன் முறையீடு செய்ய வேண்டும். அதற்குப் பின் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்