Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி-5000 ரூபாய் பரிசு தொகை

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி-5000 ரூபாய் பரிசு தொகை
தமிழ் வளர்ச்சித் துறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க "நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 22.10.2024 அன்று பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும், மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், தென்சென்னை அளவில் இராணி மேரி கல்லூரியிலும் என 3 நிலைகளில் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-. மூன்றாம் பரிசு ரூ.2000/- மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் இரு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ. 2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-. மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு 1. காந்தியின் மதநல்லிணக்கம். 2. காந்தியைப் போல் நான். 3. கப்பலோட்டிய தமிழரும் காந்தியும்.

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு 1. அண்ணல் காந்தியடிகளின் உண்ணாநிலைப் போராட்டங்கள். 2. தமிழர்கள் கண்ட காந்தி 3. காந்தியும் நேருவும்.

Post a Comment

0 Comments