Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET LATEST NEWS - ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் - வெளியிட்டுள்ள தகவல்

TET LATEST NEWS - ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் - வெளியிட்டுள்ள தகவல் 
ஆசிரியர் மறு நியமன போட்டித் தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும் என்றும் திமுக தேர்தல் அறிக்கை 177 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்‌ என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் 11 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று(24-09-2024) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்ட களத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வடிவேல் சுந்தர் முன்னிலை வகித்தார். மேலும் இந்த போராட்ட களத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments