Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

டிக்டோஜாக் கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பு- கலந்தாலோசிக்க கல்வி இயக்குனர் அழைப்பு

டிக்டோஜாக் கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பு- கலந்தாலோசிக்க கல்வி இயக்குனர் அழைப்பு


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜாக்) - 31 அம்சக் கோரிக்கை -30.09.2024 மற்றும் 01:10.2024 சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமை 23.09.2024 காலை 09.15 மணி கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க அழைத்தல்-சார்ந்து.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜாக்), 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தேதிகளில் சென்னை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து. கோட்டை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 09.15 மணி அளவில் தலைமை செயலகம், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க தங்களை அழைக்க பணிக்கப்பட்டுள்ளேன். இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள சங்கங்களின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments