மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான இருநாள் பயி லரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.20) மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாகு தொடக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், மருந்து தரக் கட்டுப்பாட்டு துறை யில் நிலவி வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங் களை வகுக்க வேண்டும்' என்றார். முன்னதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீதர் பேசியதாவது:மருந்துகளின் தரம், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் அதற் கான வழிகாட்டுதல்கள் என தரக் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகத்தில் இணையவழியே மேற்கொண்டு வருகிறோம்.
மருந்து உற்பத்தி, உரிமம் வழங்கல், புதுப்பித்தல் என 48 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்த கால அவகாசத்தில் இணையவழியே பரிசீலிக்கப்பட்டுள்ளன.
மூலப் பெயர் கொண்ட ஜென ரிக் மருந்துகளை விநியோகிப் பதில் உலக அளவில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது.
அதேபோன்று தமிழகத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ள ஃபைசர், அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்ட 40 மருந்து நிறு வனங்கள் உற்பத்தியை தொடங் கியுள்ளன. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்