Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2024-2025-ஆம் ஆண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு - குறைக்கப்பட்ட வேலை நாட்கள்

2024-2025-ஆம் ஆண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு - குறைக்கப்பட்ட வேலை நாட்கள் 


2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பார்வை (2)ல் கண்டுள்ள கடிதப்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது. 

இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் உள்ள அரசாணைகள் பார்வை (2)ல் கண்டுள்ள சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது. பார்வை (3)ல் கண்டுள்ள சட்டத்தின்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜுன் 10ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் (210 நாட்கள் கற்றல்-கற்பித்தல், தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும்) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 

இதனை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.



Post a Comment

0 Comments