Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

vinayagar chaturthi- விநாயகர் சிலை கரைப்பு: விதிமுறைகள் வெளியீடு

vinayagar chaturthi- விநாயகர் சிலை கரைப்பு: விதிமுறைகள் வெளியீடு

சென்னையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான விதிமுறைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.


மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை(கடல், ஆறுமற்றும்குளம்) பாதுகாக்கும்வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப் பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.

பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான விதி முறைகள்:

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டி ரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

சிலைகள் தயாரிக்க பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் ஆபரணங் கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன் றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப் பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.

மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்தவும் இயற்கை சாயங்க ளால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்ப டுத்த வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பி டப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments