Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Plastic uses cancer problem - பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கேன்சர் விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மற்றும் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

Plastic uses cancer problem - பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கேன்சர் விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மற்றும் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

பார்வை 1-இல் காணும் கடிதத்தின்படி தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிக்கக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024- 2025 கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உபயோகிக்கும் டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டல் போன்றவற்றை பிளாஸ்டிக்கால் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட ஆணையிட வேண்டும் எனவும், பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டல் போன்றவைகள் மாணவ மாணவிகளுக்கு பல நோய்களை உருவாக்கக்கூடியதாவும் மேலும் கொடிய நோயான கேன்சர் வரக்கூடிய நிலையில் உள்ளதால் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் படி அனைத்து அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ. மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளிவளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளிக்காய்கறி தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்டத்தின் மூலமாக பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகளை மாணவர்களுக்கு அறிவுத்திட சார்ந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


Post a Comment

0 Comments