ஆதார் விவரங்களை சமீபத்திய தகவல்களுடன் இணைய வழியில் கட்டணமின்றி புதுப்பிக்க ஏதுவாக மத்திய அரசு வழங்கியுள்ள அவகாசம் செப்.14-ஆம் தேதி நிறைவடைகிறது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அதன் இணையதனத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஆதார் பதிவு விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் கட்டணமின்றி புதுப்பிக்க கடந்த ஜூன் மாதம் வரை வழங்கிய அவகாசத்தை செப்.14-ஆம் தேதி வரை ஆதார் ஆணையம் நீட்டித்திருந்தது. தற்போது அந்த அவகாசம் தொடர்பான நினைவூட்டலை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது.
ஆதார் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணை https://myaadhaar.uidai.gov.in/ சென்று, 18 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். உள்நுழைவு பக்கத்தில் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, 'ஓடிபி' (ஒரு முறை பயன்படுத்தும் கடவுக்குறியீடு) மூலம் உள் நுழை என்பதை கிளிக் செய்யவும். பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
அதை உள்ளீடு செய்த பிறகு இணையதளத்தின் பயனர் விவரம் தாங்கிய டேஷ் போர்ட் பக்கம் திறக்கும். அதில் தற்போதைய விவரங்களை காண, ஆவண புதுப்பிப்பு பிரிவில் கிளிக் செய்யவும். பொருத்தமான அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து, அதை உரிய பகுதியில் பதிவேற்றவும். தேவையான அனைத்து ஆவணங்களும் பதி வேற்றப்பட்டதை உறுதிசெய்து சமர்ப்பி" என் பதைக் கிளிக் செய்யவும் உங்கள் புதுப்பிப்பு கோரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (யு.ஆர்எண்) உருவாக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள். துல்லியமாகவும் சரியாகவும் உள்ளதா என்பதை சரிபார்த்த பிறகு உறுதிசெய்யும் பொத்தானை கிளிக் செய்தால் உங்களுடைய புதிய தகவல்கள் பதிவேற்றப்படும். பயோமெட்ரிக் விவர புதுப்பிப்புக்கு கட்டாயம் ஆதார் சேவை மையத்தை அணுகவேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்