அரகப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உறுதிச் சான்றிதழை (போனஃபைடு) காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட் டுள்ளார்.
அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. அதற்காக அந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் உறுதிச் சான்றிதழ் (போனஃபைடு) பெறுவதற்கு அணு கும் போது அவற்றை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது.
அந்த மாணவர்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளியி லும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை வேறு பள்ளியிலும் பயின்றுள்ள நிகழ்வுகளில் கடைசியாக பயின்றுள்ள பள்ளியிலிருந்து இந்த சான் றிதழ் உடனே வழங்கப்படாமல் காலதாமதமாக்கப்படுவதாக தக வல்கள் வந்துள்ளன.
இதுபோல், வெவ்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சார் பான விவரங்களை எமிஸ் தளத்தில் இருந்து பெற்று அதனடிப்ப டையில் உறுதிச் சான்றிதழை கால தாமதமின்றி உடனே சம்பந்தப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். இதுசார்ந்து அனைத்துப் பள் ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
மேலும், மேற்கண்ட சான்றிதழை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் மேலொப்பம் செய்து வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்