Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN LATEST NEWS -மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-முழு விவரங்கள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-முழு விவரங்கள்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று (13.04.2024)முதல் (21.04.2024)ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவ தேர்வுகள் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து 6-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரம்ஜான் பண்டிகை காரணமாக நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டன.

மேலும்,மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தேர்தல் முகாம்களாக செயல்பட இருக்கின்றன. இத்துடன் ஆசிரியர்களும் தேர்தல் பணிகளின் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே இதனைத் தொடர்ந்து நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments