தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகின்றது. மேலும் பருவ நிலை மாற்றத்தினால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
எனவே. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
பொதுவானவை :
1. அதிக வெய்யில் உள்ள நேரங்களில் குறிப்பாக பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நேரடி வெய்யில்படும் திறந்தவெளியினை பயன்படுத்துவதைத் தவிர்த்திடல் வேண்டும். இந்நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் அல்லது விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்தவெளியில் நடத்துதல் கூடாது.
2. மாணவ / மாணவியர் தண்ணீர் தேவையான அளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
3. ஒவ்வொரு பாடவேளை துவக்கத்தின் போதும் மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
4. மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவரும் குடிநீர் அல்லது பள்ளியில் பயன்பாட்டில் உள்ள குடிநீரை அவ்வப்போது பருக வேண்டும்.
5. பயணத்தின் போதும் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
6.ஓ.ஆர்.எஸ் மற்றும் வீட்டில் தயார் செய்த எலுமிச்சைச் சாறு. நீர்மோர், லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம்.
7. அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக நீர் சத்து அதிகம் நிறைந்த பழ வகைகளானதர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு பழம், திராட்சை, அன்னாசி,
AmXsWHi4Ny8FUVcoJMpd0NTa3p/view
வெள்ளரி. கீரைகள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம். 8.பள்ளியில் தேவையான ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டகத்தினை தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
9. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவித்தல் வேண்டும்.
10. மரங்களில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பறவைகளுக்கான நீர் கொள்கலன்களை அமைத்து பறவைகள் நீர் அருந்துவதற்கான சூழலை உருவாக்கித் தரலாம். 6
11. மாணவர்களுக்கு உள்அரங்க விளையாட்டுகளான (உ.ம்) சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டுகளை மட்டும் விளையாட வாய்ப்பளிக்கலாம்.
12. மாணவர்கள் வெய்யிலில் செல்லும் போது குடையை பயன்படுத்திட அறிவுறுத்த வேண்டும்.
மிகை அல்லது அதிக வெப்ப சலனத்தை தவிர்ப்பதற்கான அறிவுரைகள்:
மிகை அல்லது அதிக வெப்ப சலனத்தை தவிர்ப்பதற்கு பள்ளி மாணவர்களின் மூலம் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கீழ்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எந்நேரமும் யார் வேண்டுமானாலும் வெப்ப நெருக்கடி மற்றும் வெப்ப சலனம் சார்ந்த சூழலுக்கு ஆட்படலாம். இருப்பினும், குறிப்பிட்ட சிலருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம். இதில் கூடுதல் கவனம் தேவை உள்ளவர்கள் பின்வருமாறு
பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள்
கர்ப்பிணிகள்
திறந்தவெளியில் பணி புரியும் நபர்கள்
மனநல பாதிப்பிற்கு ஆளான நபர்கள்
உடல் நலமற்றவர்கள் குறிப்பாக இதய நோய் மற்றும் மிகை ரத்த அழுத்தம்உடையவர்கள்
குளிர்வான காலநிலையிலிருந்து வெப்பமான காலநிலை கொண்ட இடங்களுக்கு இடம்பெயர்பவர்கள். அத்தகைய நபர்கள் இந்த வெப்ப சலனத்தின் போது பயணம் செய்வார்களாயின் அவர்களது உடலானது காலநிலை இணக்கம் கொள்ள குறைந்தது ஒரு வார காலமாவது எடுத்துக் கெர்ள்ளும். எனவே அவர்கள் அதிகளவு நீர் பருக வேண்டும். காலநிலை இணக்கத்தை ஒருவர் படிப்படியாக வெளியில் செல்வதாலும், வெப்ப சூழ்நிலையில் வேலை செய்வதாலும் ஏற்படுத்த இயலும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்