Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET NEWS -பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு முடிவு எப்போது?- புதிய செய்தி

பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன் மாதம் வெளியாகிறது
பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியில் 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற போட்டி எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கான விடைக் குறிப்புகள் பிப். 19- ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது தேர்வர்கள் பிப். 25-ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக் கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தற்போது தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளி யிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, பணி நியமனத் துக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments