Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 19 இல் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை-புகார அளிக்க உதவி எண்கள் வெளியீடு

ஏப்ரல் 19 இல் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை-புகார அளிக்க உதவி எண்கள் வெளியீடு
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

மக்களவைத் தேர்தல் நாளன்று ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாக பணியின் தன்மைகேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்க தொழிலாளர் துறையில் சார்பில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என தனித்தனியாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புகார் தெரிவிக்க மொபைல் எண்கள்:

வடசென்னை-சி விஜயலட்சுமி தொழிலாளர் துணை ஆய்வாளர்-9840829835

தென் சென்னை-இ.ஏகாம்பரம்-9790930846-தொழிலாளர் துணை ஆய்வாளர்

மதிய சென்னை-ஆர். வேதநாயகி-9884264814-தொழிலாளர் துணை ஆய்வாளர்

044-24330354 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Post a Comment

0 Comments